இன்று அம்மாவின் நினைவு நாள்
இருக்கின்றாய் அம்மா நீ!
பாண்டுரங்கனைப் பார்த்த
பரவசத்தில் பறந்து விட்டாயா
எங்களை விட்டு ! உன்
நாட் குறிப்பேட்டை பார்த்தோம்
கடைசி நாள் குறிப்பைக் கண்டு
அதிர்ந்தோம் !அதிசயித்தோம்!
ஆம் !நீ எழுதிய கடைசி
வார்த்தை ஓய்வு !
இதர நாட்களில் இல்லை
இந்த வார்த்தை ஓய்வு!
அது நிரந்தர ஓய்வு என்று
தெரிந்திருந்தால் நிச்சயம்
எழுதி இருக்கமாட்டாய்போலும் !
எங்களின் சுமை தாங்கியே!
பாரம் சுமக்க முடியாமல்
ஓய்வெடுக்க சென்றாயா!
இனி எங்கு இறக்கி
வைப்போம், எங்கள் பாரத்தை!
புரட்டிப் பார்த்தேன்
உன் சிறு கதைத் தொகுப்பை!
உன் கதைகளின் தலைப்பு !
அது கண்டு ஏற்பட்டது திகைப்பு !
புரிந்தது உன் வாழ்வின் தத்துவம் !
அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும்
அப்பாவிற்கு பிறகு பிள்ளைகளுக்குள்
"பாலம்" ஆகா இருந்தாய் நீ !
அறுவை சிகிச்சை வெற்றி !
ஆனால் நீ இல்லாமல்
வெற்றிடம் இன்று
"கைக்கு எட்டியது " வாய்க்கு
எட்ட வில்லை என்பது இதுதானோ !
நீ எங்கு சென்றாலும்
வருவோம் உன்னுடன்!
இப்போதும் வர விருப்பம்
ஆனால் முடியவில்லை
"கடமை அழைக்கிறது" எங்களை !
உனக்குச் செய்ய
மனைவி மக்களுக்கு செய்ய !
வரவில்லை அதனால்!
எட்டாம் நாள் காரியத்தில்
காட்சி அருகில் கண்டவுடன்
"மனம் தெளிந்தது " எங்களுக்கு!
" உயிர் பறவை " உன்
உடலைவிட்டு பறந்தவுடன்
"அவள் எங்கே " என்று
தேடினோம் வாடினோம்!
"ப்ராப்தம் " எங்களுக்கு
இல்லை போலும் !உன்னுடன்
வருடம் பல சேர்ந்து வாழ !
உன்னை நினைத்து வழிபட்ட
முதல் நாள் வந்தாயே !
"பேபி ஷோ " பெண் குழந்தை
வடிவத்தில் !பெற்றாயே
நாங்கள் தந்த இனிப்பை !
சென்றாயே சிரித்த வண்ணம் !
"அன்னை அருள் " என்றும்
உண்டு எங்களுக்கென்று
குறிப்பால் உணர்த்தியவளே !
எங்கள் பெண் தெய்வமே !
அம்மா!இறக்கவில்லை நீ !
இருக்கின்றாய் ! இருப்பாய்
என்றென்றும் எங்களுடன் !
"சுந்தர் என் கண்மணி " என்பாயே
இனி என்றும் எங்களின்
கண்மணி நீ தானம்மா !
இருக்கின்றாய் அம்மா நீ!
அன்புடன்
L .சுந்தரராமன்
1