கும்பகோணம் கோவில்
1.கைலாசநாதர் கோவில் திங்களூர் நவக்ரஹ கோவில்களில் சந்திரனுக்கு உண்டானது.சந்திரனுக்கே சஞ்சலம்/சங்கடம் நீங்கிய ஸ்தலம.கும்பகோணத்தில் இருந்து 15 km .
2.தியாகப்ரம்மம் தியாகராஜர் ஜீவா சமாதி மற்றும் ஐயாறப்பர் என்ற பஞ்ச நதிதீஸ்வரர் --அறம் வளர்த்த நாயகி என்ற தர்ம சம்வர்தினி கோவில் திருவையாறு.
3.வசிஷ்டேஷ்வேர் கோவில்-திட்டை -தஞ்சாவூர் அருகில் : வசிஷ்டேச்வர் என்ற தான்தோன்றி ஈஸ்வரர் -உலகநாயகி என்ற மங்களாம்பிகை .குரு பகவான் தனி சன்னதியில் ஈஸ்வரனுக்கும் அம்பிகைக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார்.
4.இங்கிருந்து சற்று தொலைவில் புண்ணை நல்லூர் மாரியாம்மன் கோவில் இருக்கிறது.இந்த கோவிலுக்கு பின்புறம் அழகிய கோதண்டராமர் கோவில் உள்ளது.
5.சுவாமிமலை முருகன் கோவில் கும்பகோணம் அருகில் ,திருவலஞ்சுழி விநாயகர்(கடல் நுரையால் ஆனா விநாயகர்) மற்றும் பட்டீஸ்வரம் துர்கையம்மன் தேனுபுரீஸ்வரர் ஆலயம்.(சுவாமிமலையில் இருந்து 3km ).
6.இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :அகிலாண்டேஸ்வரி -அகத்தீஸ்வர கோவில் ,கருவளர்சேரி ,கும்பகோணம் அருகில்.வலங்கைமான் ஆலங்குடி செல்லும் வழியில் கும்பகோணத்தில் இருந்து 7km .பட்டேஸ்வரத்தில் இருந்தும் செல்லலாம் .தம்பதிகள் குழந்தை வேண்டி கரு உருவாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் ஸ்தலம்.கணவன்-மனைவியாக சென்று வரவேண்டிய கோவில்.எனது நண்பர் M .S சுந்தரம் சொல்ல நாங்கள் சென்று வந்தோம்.
7. இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :சறகுனேஸ்வரர்--சர்வாங்க நாயகி கோவில்.ஈஸ்வரர் ஸ்வயம்பு மூர்த்தி .அம்பாள் ஐந்தரை அடி உயரத்துடன் அருள் பாலிக்கிறார் .இது ஒரு முக்தி ஸ்தலம் .'கரு இலி ' என்பது மருவி தற்போது கருவிலி என்று உள்ளது.இங்கு வந்து வழி பட்டவர்களுக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதுஐதீகம் .அதாவது எந்த கருவில் இருந்தும் நாம் உருவாக மாட்டோம் என்று நம்பிக்ககை.கோவிலுக்கு எதிரில் அழகிய நீர் நிறைந்த குளம்.கும்பகோணம் சோழன் வண்டியில் செல்லும் போது ஒரு பெரியவர் சொல்லி இந்த கோவிலுக்கு சென்று வந்தோம்.கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் பாதையில் இந்த ஸ்தலம் உள்ளது.குருக்கள் ஸ்ரீ குமார் No 9962711005.
8. இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :திருவீழிமிழலை கோவில் .கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் பாதையில் கூந்தலூர் ,இருவாஞ்செரி தென்கரை அருகில் இந்த ஸ்தலம் உள்ளது.இறைவன் பெயர் விழிநாதர்-- அம்பாள் பெயர் சுந்தரகுசாம்பிகை
இங்கிருந்து அச்சுதமங்கலம் வழியாக வாஞ்சிநாதர் --மங்களநாயகி ஸ்ரீவாஞ்சியம் கோவில்.செல்லலாம்.இங்கு யமதர்மராஜனுக்கு தனி சன்னதி உள்ளது.முதலில் இவரை தரிசித்து பின்புதான் ஈஸ்வரன்,அம்பாளை வழிபட வேண்டும் .கருவிலி (முக்தி ஸ்தலம் ) தரிசனம் முடித்து தொடர்ச்சியாக ஸ்ரீவாஞ்சியம் யமதர்மராஜாவை தரிசித்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முக்தி பெறலாம்.
9.கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம் ராகு -கேது பரிகார ஸ்தலம். எனது நண்பர் V .ஸ்ரீனிவாசன் சொல்ல திருநாகேஸ்வரம் ரயில்நிலையம் அருகில் உள்ள, இது வரை நாங்கள் பார்க்காத, புராதனமான தேய்பெருமானல்லூர் சிவன் கோவில்.இங்கு ருத்ராக் ஷா ஈஸ்வரன் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார் .அம்பாள் பெயர் வேதாந்த நாயகி .இதுவும் ஒரு முக்தி ஸ்தலம்
நாமக்கல் கோவில்
1.கடந்த ஞாயிறு அன்று , கரூர் தான்தோன்றிமலை .கல்யாண வேங்கடரமண கோவில் (கரூரில் இருந்து 4km ), பேருந்து நிலையத்தின் வெகு அருகில் (ஆட்டோ தேவை இல்லை)உள்ள அலங்கார நாயகி உடனுறை கல்யாண பசுபதிஈஸ்வரர் கோவில் ,நாமக்கல் ஆஞ்சநேயர், லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி ஆகியோரை தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது.