Thursday, 29 September 2016

Three narasimhar darisanam in one day.

                                 ஒரே நாளில்  மூன்று நரசிம்மர்  தரிசனம்         
பல வருடங்களாக ஒரே நாளில்  தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த மூன்று நரசிம்மர்  தரிசனம் சமீபத்தில் கிடைக்கப் பெற்றோம் .ஆம்.சிங்கர்குடி அல்லது சிங்கிரிகுடி அல்லது அபிஷேகப்பாக்கம் நரசிம்மர்,பூவரசன்குப்பம் நரசிம்மர் மற்றும் பரிக்கல் நரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்மர் கோயில் தரிசனமே அது .
காலையில் 6.30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் கிளம்பி ,திண்டிவனத்தில் சிற்றுண்டி முடித்து பாண்டிச்சேரி மணக்குள விநாயகரை தரிசித்து ,பாண்டிச்சேரி--கடலூர் ரோட்டில் தவளக்குப்பம் அடைந்து வலது பக்கம் திரும்பி அபிஷேகப்பாக்கம் வழியாக சிங்கர்குடி நரசிம்மர் கோயில் 10 மணிக்கு சென்றோம் .இங்குள்ள உக்கிர நரசிம்மரை (16 கைகளுடன்  இரணியனை வதம் செய்த கோலம்) தரிசித்து சுமார் 11 மணிக்கு கிளம்பினோம்.(0413-2618759)
மீண்டும்  அபிஷேகப்பாக்கம் மெயின் ரோடு வந்து மேலும் வலது பக்க சாலையில்  பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் விரைந்தோம்.சுமார் 45 நிமிட பயணம்.பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் 12.30 வரை திறந்திருக்கும் .நாங்கள் சென்ற போது மேனி 11.45.அருமையான அமர்ந்த திருக்கோலம்.நாங்கள் சென்ற அன்று திருமஞ்சனம் நடந்ததால் சிறிது நேரம்  பொது தரிசன வரிசையில் நின்றோம் .தரிசனம் முடிந்து
1 மணிக்கு வெளியில் வந்தோம் (0413-2698191,ஸ்ரீ.பார்த்தசாரதி பட்டர் 9443959995)
பரிக்கல் கோயில் 4 மணிக்கு தான் திறக்கும் .அதனால் பண்ருட்டி வந்து மதிய உணவு உண்டு சிறிது ஓய்வுக்கு பிறகு 3.30இக்கு பரிக்கல் கிளம்பினோம் (பூவரசன் குப்பத்தில் இருந்து விழுப்புரம் வந்து உணவுக்குப்பின்னும் பரிக்கல் செல்லலாம்).பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சாந்த நரசிம்மர் ;பிரார்த்தனை ஸ்தலம் .அருமையான அமர்ந்த திருக்கோலம் .பிரதக்ஷிணம் வரும் ப்ராகாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு முன்பு நெல் பரப்பி நம் வேண்டுதலை எழுதி ஆஞ்சநேயரை 16 முறை வலம் வர சொல்கிறார் அன்று இருந்த ராகவா பட்டாச்சார்யார் (.9943934152.).மேலும் அவர் நாங்கள் வந்தது போல் முதலில் சிங்கர்குடி உக்கிர நரசிம்மர் ,பின்பு பூவரசன்குப்பம் உக்கிரம் தணிந்த லட்சுமி நரசிம்மர், பரிக்கல் சாந்த நரசிம்மர் என்ற வரிசையில் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அங்கிருந்து மூன்று நரசிம்மரை ஒரே நாளில் தரிசித்த மகிழ்ச்சியுடன் விழுப்புரம்,திண்டிவனம்,செங்கல்பட்டு வழியாக இல்லம் வந்தடைந்தோம்.

                                                                                 L .சுந்தரராமன் ,சிட்லபாக்கம்
                                                                                                    9445066061

Friday, 10 June 2016

TEMPLES IN TIRUVADISOOLAM,Near Chinglepet, Tamilnadu



                    திருவடிசூலம் கோயில்கள் --- ( Temples in Tiruvadisoolam )
                               சென்னைக்கு அருகில் செங்கல்பட்டிலிருந்து 8 KM  தொலைவில் உள்ளது திருவடிசூலம் என்ற கிராமம்..இக்கிராமத்தில் புராதனமான ஞானபுரீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.மேலும் இக்கோயிலில் இருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் அருகருகே தற்போது புதிதாக பைரவவர் ,தக்ஷினாமுர்த்தி தியான மண்டபத்துடன் அமைந்த கோயில், 51அடி உயர கருமாரியம்மன் கோயில் மற்றும் பிரம்மாண்ட திருவேங்கடமுடையான்  கோயில்கள் அமைத்துள்ளன .
                                 நாங்கள் (9-6-2016 அன்று) கார் மூலம் மாலை 3.30PM தாம்பரத்தில் இருந்து கிளம்பி GST ரோட்டில் மறைமலை நகருக்கு அடுத்து வரும் மகேந்திரா சிட்டி ரோடில் ( It is on the left side of GST  road ) பயணம் செய்து  மகேந்திரா சிட்டி ரோடில் பின் கேட் அருகில் PARKAR  கம்பெனி தாண்டி இடது பக்க சாலையில் சென்றோம் .இந்த சாலை முடியும் இடத்தில பைரவர் கோயில் செல்லும் வழி போர்டு வைக்கப்பட்டு உள்ளது..அதனை பின்பற்றி சென்று கோயிலை அடைந்தோம்.(May be about 5-6 KM from GST road )
                                  அருமையான சுற்றுச் சூழல் .ஆகாயம் போல் அமைந்த விட்டதுடன் கூடிய கோயிலின் உள்ளே 12 ராசிகளை குறிக்கும் 12 படிகள் ஏறி மேடையில் ஒருபுறம் சிவன் மறுபுறம் பைரவர் பகவானை வழிபட்டோம்
பின்பு தியானமண்டபம் வந்து அமர்ந்து அருமையான .தக்ஷினாமுர்த்தி முன்பு சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யலாம்.முடிந்தால் நீலநிற ஆடை அணிந்து ,அன்ன தானத்துக்கு அரிசி (5kg  or  10kg or முடிந்த அளவு ) எடுத்து செல்லலாம். இயற்கை எழில் சூழ்ந்த இவ்விடம் மிகவும் அமைதியாக உள்ளது.( M :9940392913)
                                 இக் கோயிலிலிருந்து வெளியே வந்து இடப்புறமாக உள்ள சாலையில் 1-2 km சென்று (இங்கு நோட்டீஸ் போர்டு உள்ளது) 51 அடி உயர கருமாரியம்மன் மற்றும் திருவேங்கடமுடையான் கோயில் அடைந்தோம் .கூட்டமில்லாத ,ஜருகண்டி இல்லாத, அருமையான தரிசனம் .மிக உயரமான பெருமாள்.குருக்கள் நன்கு கோயிலை பற்றி கூறுகிறார் .மனதுக்கு ரம்யமான ஒரு இடம்.(பட்டாச்சாரியார் Sri .R .அனந்தக்ருஷ்னன் 9159252448)
                                 இக் கோயிலிலிருந்து வெளியே வந்து வலது புற சாலையில் திரும்பி சிறுது தூரம் சென்று மீண்டும் வலது புற சாலையில் திருவடிசூலம் சிவன் கோயிலை அடைந்தோம்.மிகவும் புராதனமான கோயில்.குரங்கு கூட்டம் எங்களை வரவேற்றது.இருக்கும் ஒரே பொட்டி கடையில் பூ வாங்கி கொண்டு குரங்குகளிடம் சிக்காமல் கோயில் உள்ளே சென்று' பிறவி இடர் நீக்கும்'இடைசுரனாதர் என்கிற ஞானபுரீச்வரை தரிசித்து ,கோவர்தனாம்பிகை அம்பாளையும் தரிசித்து மன நிறைவுடன் வெளியே வந்தோம்.
(குருக்கள் .M: 9444948937)
                                 இங்கிருந்து செங்கல்பட்டு -திருபோரூர் மெயின் ரோடு அடைந்து (1 km  from sivan temple ) செங்கல்பட்டு வந்து தாம்பரம் வந்து சேர்ந்தோம் சுமார் 8-30 மணி அளவில்.
                                 கூடியவரையில் இரவு 7  மணிக்குள் தரிசனம் முடித்து திரும்புவது நல்லது.கார் பயணமாக இருந்தால் நேரம் மிச்சமாகும்.மிக குறைந்த அளவு பஸ்களே இருக்கும் போல் தோன்றுகிறது.

                                                                                                      L .சுந்தரராமன்
                                                                                                        சிட்லபாக்கம்
                                                                                                                9445066061
 
                                                                                                   
                                                                               .
                               



Wednesday, 23 March 2016

kumbakonam 2016 visit temple brief



                                                          கும்பகோணம் கோவில்
1.கைலாசநாதர் கோவில் திங்களூர் நவக்ரஹ கோவில்களில் சந்திரனுக்கு உண்டானது.சந்திரனுக்கே சஞ்சலம்/சங்கடம் நீங்கிய ஸ்தலம.கும்பகோணத்தில் இருந்து 15 km .
2.தியாகப்ரம்மம் தியாகராஜர் ஜீவா சமாதி மற்றும் ஐயாறப்பர் என்ற பஞ்ச நதிதீஸ்வரர் --அறம் வளர்த்த நாயகி என்ற தர்ம சம்வர்தினி கோவில் திருவையாறு.
3.வசிஷ்டேஷ்வேர் கோவில்-திட்டை -தஞ்சாவூர் அருகில் : வசிஷ்டேச்வர் என்ற தான்தோன்றி ஈஸ்வரர் -உலகநாயகி என்ற மங்களாம்பிகை .குரு பகவான் தனி சன்னதியில் ஈஸ்வரனுக்கும் அம்பிகைக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார்.
4.இங்கிருந்து சற்று தொலைவில் புண்ணை நல்லூர் மாரியாம்மன்  கோவில் இருக்கிறது.இந்த கோவிலுக்கு பின்புறம் அழகிய கோதண்டராமர் கோவில் உள்ளது.
5.சுவாமிமலை முருகன் கோவில் கும்பகோணம் அருகில் ,திருவலஞ்சுழி விநாயகர்(கடல் நுரையால் ஆனா விநாயகர்) மற்றும் பட்டீஸ்வரம் துர்கையம்மன் தேனுபுரீஸ்வரர் ஆலயம்.(சுவாமிமலையில் இருந்து 3km ).
6.இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :அகிலாண்டேஸ்வரி -அகத்தீஸ்வர கோவில் ,கருவளர்சேரி ,கும்பகோணம் அருகில்.வலங்கைமான் ஆலங்குடி செல்லும் வழியில் கும்பகோணத்தில் இருந்து 7km .பட்டேஸ்வரத்தில் இருந்தும் செல்லலாம் .தம்பதிகள் குழந்தை வேண்டி கரு உருவாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் ஸ்தலம்.கணவன்-மனைவியாக சென்று வரவேண்டிய கோவில்.எனது நண்பர் M .S சுந்தரம் சொல்ல நாங்கள் சென்று வந்தோம்.
7. இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :சறகுனேஸ்வரர்--சர்வாங்க நாயகி கோவில்.ஈஸ்வரர் ஸ்வயம்பு மூர்த்தி .அம்பாள் ஐந்தரை அடி உயரத்துடன் அருள் பாலிக்கிறார் .இது ஒரு முக்தி ஸ்தலம் .'கரு இலி ' என்பது மருவி தற்போது கருவிலி என்று உள்ளது.இங்கு வந்து வழி பட்டவர்களுக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதுஐதீகம் .அதாவது எந்த கருவில் இருந்தும் நாம் உருவாக மாட்டோம் என்று நம்பிக்ககை.கோவிலுக்கு எதிரில் அழகிய நீர் நிறைந்த குளம்.கும்பகோணம் சோழன் வண்டியில் செல்லும் போது ஒரு பெரியவர் சொல்லி இந்த கோவிலுக்கு சென்று வந்தோம்.கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் பாதையில் இந்த ஸ்தலம்  உள்ளது.குருக்கள் ஸ்ரீ குமார் No 9962711005.
8. இதுவரை நாங்கள் பார்க்காத கோவில் :திருவீழிமிழலை கோவில் .கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் பாதையில் கூந்தலூர் ,இருவாஞ்செரி தென்கரை அருகில் இந்த ஸ்தலம் உள்ளது.இறைவன் பெயர் விழிநாதர்-- அம்பாள் பெயர் சுந்தரகுசாம்பிகை
இங்கிருந்து அச்சுதமங்கலம் வழியாக வாஞ்சிநாதர் --மங்களநாயகி ஸ்ரீவாஞ்சியம் கோவில்.செல்லலாம்.இங்கு யமதர்மராஜனுக்கு தனி சன்னதி உள்ளது.முதலில் இவரை தரிசித்து பின்புதான் ஈஸ்வரன்,அம்பாளை வழிபட வேண்டும் .கருவிலி (முக்தி ஸ்தலம் ) தரிசனம் முடித்து தொடர்ச்சியாக ஸ்ரீவாஞ்சியம் யமதர்மராஜாவை தரிசித்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முக்தி பெறலாம்.
9.கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம் ராகு -கேது பரிகார ஸ்தலம். எனது நண்பர் V .ஸ்ரீனிவாசன் சொல்ல திருநாகேஸ்வரம் ரயில்நிலையம் அருகில் உள்ள, இது வரை நாங்கள் பார்க்காத, புராதனமான தேய்பெருமானல்லூர் சிவன் கோவில்.இங்கு ருத்ராக் ஷா ஈஸ்வரன் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார் .அம்பாள் பெயர் வேதாந்த நாயகி .இதுவும் ஒரு முக்தி ஸ்தலம்
                                                         நாமக்கல் கோவில்
1.கடந்த ஞாயிறு அன்று , கரூர் தான்தோன்றிமலை .கல்யாண வேங்கடரமண கோவில் (கரூரில் இருந்து 4km ), பேருந்து நிலையத்தின் வெகு அருகில் (ஆட்டோ தேவை இல்லை)உள்ள அலங்கார நாயகி உடனுறை கல்யாண பசுபதிஈஸ்வரர் கோவில் ,நாமக்கல் ஆஞ்சநேயர், லக்ஷ்மி நரசிம்ஹ  சுவாமி  ஆகியோரை தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது. 

Thursday, 23 July 2015

500A AND M18G BUS LETTER TO tkm












                   C M W A /B U S /2015                                                          26-7-2015                                                 
                   Sir,
                                    பொருள் : 500A மற்றும் M 18G ரூட் டில் சிறிய மாற்றம் பற்றி

             சாதரணமாக ஒரு பஸ் எந்த ரூட் வழியாக செல்கிறதோ ,அதே ரூட்டில் தான் திரும்பி ரிட்டர்ன் ஆகும்.
            ஆனால் ஹஸ்தினாபுரம் to செங்கல்பெட் செல்லும் 500A மற்றும் ஹஸ்தினாபுரம் to கூடுவாஞ்சேரி செல்லும் M 18G ஆகிய பஸ்  ஹஸ்தினபுரத்தில் இருந்து செல்லும் போது சிட்லபாக்கம் பேரூராட்சி, சானடோரியம் மேம்பாலம் வழியாக செல்கிறது .ஆனால் செங்கல்பெட்டில் இருந்து .ஹஸ்தினாபுரம், கூடுவாஞ்சேரி to ஹஸ்தினாபுரம் வரும் போது
M I T  மேம்பாலம்,R P ரோடு வழியாக ஹஸ்தினாபுரம் சென்று அடைகிறது .இதற்கு முக்கிய காரணம், MEPZ  அருகில் G S T ரோட்டில் பயணிகளுக்கு சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைத்த பிறகு, பேருந்துகள் வலது புறம் திரும்பி  சானடோரியம் மேம்பாலம்  செல்லும்வழியை அடைத்துவிட்டதுதான். இதனால் சிட்லபாக்கம் பேரூராட்சி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறும் சிட்லபாக்கம் பயணிகள் ஹஸ்தினாபுரம் சென்று அங்கிருந்து வேறு பஸ் மூலம் சிட்லபாக்கம் வர வேண்டயுள்ளது .இதனால் கூடுதல் நேரம் கூடுதல் பணம் செலவாகிறது.
               எனவே 500A மற்றும் M 18G பஸ்களை MIT மேம்பாலம் ஏறி U TURN அடித்து சானடோரியம் மேம்பாலம்  வழியாக வரச் செய்து  ஹஸ்தினாபுரம் to செங்கல்பெட் ,ஹஸ்தினாபுரம் to கூடுவாஞ்சேரி போகும்போதும், செங்கல்பெட்டில் to ஹஸ்தினாபுரம்,கூடுவாஞ்சேரி to ஹஸ்தினாபுரம் வரும்போதும் சிட்லபாக்கம் பேரூராட்சி வழியாக செல்லும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் .( தற்போது S 8 பஸ்சும் ,. அண்ணா பேருந்து நிலையதிலிருந்து  (MEPZ BUS STAND ) கிளம்பும் அனைத்து தாம்பரம் மார்க்கம் பேருந்துகளும் MIT மேம்பாலம் ஏறி U TURN அடித்து செல்கின்றன.எனவே 500A மற்றும் M 18G பஸ்கள் இம்மாதிரி செல்ல எந்த தடையும் இல்லை .).
            
   
        மேற் கூறிய சிறிய மாற்றத்தால்  கிடைக்கும் நன்மைகள் :
   1.பஸ் ரூட் 500A ,M18G   போகும்போதும், வரும்போதும்ஒரே வழியாக செல்லும்.

   2.சிட்லபாக்கம் பயணிகளின் நேரம் ,பணம் விரயம் ஆகாமல் தவிர்க்கலாம்.

   3.இதனால் ஹஸ்தினாபுரம் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை .

                        எனவே தக்க நடவடிக்கை எடுத்து 500A மற்றும் M 18G ரூட்டை மேற்கண்டவாறு மாற்றிதர  வேண்டுகிறோம்
                          நன்றி !

                                                                                                        இப்படிக்கு ,

                                                                                                  L .சுந்தரராமன்
                                                                                                            தலைவர்

Monday, 15 June 2015

Sulochana amma ninaivu naal

                                                   
                             இன்று அம்மாவின் நினைவு நாள்

                                     இருக்கின்றாய் அம்மா நீ!

       பாண்டுரங்கனைப் பார்த்த
               பரவசத்தில் பறந்து விட்டாயா
       எங்களை விட்டு ! உன்
               நாட் குறிப்பேட்டை  பார்த்தோம்
       கடைசி நாள் குறிப்பைக் கண்டு
               அதிர்ந்தோம் !அதிசயித்தோம்!
       ஆம் !நீ எழுதிய கடைசி
                வார்த்தை ஓய்வு !
       இதர நாட்களில் இல்லை
                இந்த வார்த்தை ஓய்வு!
        அது நிரந்தர ஓய்வு என்று
                தெரிந்திருந்தால் நிச்சயம்
       எழுதி இருக்கமாட்டாய்போலும் !
       எங்களின் சுமை தாங்கியே!
                  பாரம் சுமக்க முடியாமல்
        ஓய்வெடுக்க சென்றாயா!
                  இனி எங்கு இறக்கி
       வைப்போம்,  எங்கள் பாரத்தை!
                 புரட்டிப் பார்த்தேன்
        உன் சிறு கதைத் தொகுப்பை!
                  உன் கதைகளின் தலைப்பு !
        அது கண்டு ஏற்பட்டது திகைப்பு !
                  புரிந்தது உன் வாழ்வின் தத்துவம் !

        அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும்
                 அப்பாவிற்கு பிறகு பிள்ளைகளுக்குள்
         "பாலம்" ஆகா இருந்தாய் நீ !
                   அறுவை சிகிச்சை வெற்றி !
         ஆனால் நீ இல்லாமல்
                    வெற்றிடம் இன்று
          "கைக்கு எட்டியது " வாய்க்கு
                    எட்ட வில்லை என்பது இதுதானோ !
          நீ எங்கு சென்றாலும்
                  வருவோம் உன்னுடன்!
        இப்போதும் வர விருப்பம்
                ஆனால் முடியவில்லை
       "கடமை அழைக்கிறது" எங்களை !
                 உனக்குச் செய்ய
        மனைவி  மக்களுக்கு செய்ய !
                வரவில்லை அதனால்!

        எட்டாம் நாள் காரியத்தில்
                காட்சி அருகில் கண்டவுடன்
       "மனம் தெளிந்தது " எங்களுக்கு!
                " உயிர் பறவை " உன்
         உடலைவிட்டு பறந்தவுடன்
                 "அவள் எங்கே " என்று
       தேடினோம் வாடினோம்!
                 "ப்ராப்தம் " எங்களுக்கு
       இல்லை போலும் !உன்னுடன்
                வருடம் பல சேர்ந்து வாழ !
       உன்னை நினைத்து வழிபட்ட
                முதல் நாள் வந்தாயே !
       "பேபி ஷோ " பெண் குழந்தை
                வடிவத்தில் !பெற்றாயே
       நாங்கள் தந்த இனிப்பை !
               சென்றாயே சிரித்த வண்ணம் !
     "அன்னை அருள் " என்றும்
                உண்டு எங்களுக்கென்று
     குறிப்பால் உணர்த்தியவளே !
               எங்கள் பெண் தெய்வமே !

     அம்மா!இறக்கவில்லை நீ !
              இருக்கின்றாய் ! இருப்பாய்
     என்றென்றும் எங்களுடன் !
             "சுந்தர் என் கண்மணி " என்பாயே
     இனி என்றும் எங்களின்
              கண்மணி நீ தானம்மா !
    இருக்கின்றாய் அம்மா நீ!


                                                                        அன்புடன்
                                                                     L .சுந்தரராமன்
      
                











1

Monday, 19 January 2015


                                                        மகா பெரியவா!         
             என் மகன் திருமணம் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறப்பாக நடை பெற்றது.செப்டம்பர் 16ஆம் தேதிதான் இரு வீட்டார் சேர்ந்து 12-12-2013 திருமணம் செய்ய முடிவெடுத்தோம் .உடனடியாக சத்திரம் தேடினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.ஒரு சிலர் டிசம்பர் 2014லுக்கா வேண்டும் என்று நகைத்தார்கள் .டிசம்பர் பனிரெண்டாம் தேதியை விட்டால் வேறு தேதி தற்போதைக்கு இல்லை என்ற நிலையில் சத்திரம் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது .
             செப்டம்பர் 19ஆம் அன்று இரவு என் தங்கை கணவரிடம் மறுநாள் பரங்கிமலை பகுதியில் உள்ள சில சத்திரங்களுக்கு சென்று பார்க்கலாம் என்று கூறினேன்.அவரும் சரி என்றார்.ஒரு மணி நேரத்தில்   என் தங்கை கணவர் கூப்பிடு 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' மண்டபம் காலியாக இருப்பதாக அதன் உரிமையாளர் சொன்னதாக கூறினார்.மேலும் ,என் தங்கைதான், நான் பேசியபோது ஹாலில் மாட்டியிருந்த மகா பெரியவா படத்தை பார்த்தவண்ணம் பெரியவா பேர்ல இருக்கும் 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' கிடைக்குமான்னு பாருங்களேன் என்று சொன்னதாகவும், உடனே உரிமையாளருக்கு போன் பண்ணி அவர் வரச் சொன்னதையும் கூறினார்,என் தங்கைகணவர்.
              மறுநாள் முதல வேலையாக 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்'சென்று உரிமையாளரிடம் பேசி அட்வான்ஸ் கொடுக்கும் நேரத்தில் மண்டப மேனேஜர் உரிமையாளரிடம் ஓடி வந்து 'சார் ,ஒரு தவறு நடந்து விட்டது 'டிசம்பர் 11ஆம் தேதி ஒரு விழாவிற்கு அட்வான்ஸ் வங்கி விட்டேன் ;நோட்டீஸ் போர்டு சார்ட்டில் குறிக்க மறந்து விட்டேன் .எனவே டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மண்டபம்  கல்யாணத்திற்கு கொடுக்க வாய்ப்பில்லை' என்று கூறினார்.கைக்கு எட்டியது வாய்க்கு  எட்டவில்லையே என்று வருத்தப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று திகைத்து உரிமையாளரிடம் எதாவது அட்ஜஸ்ட் பண்ணி டிசம்பர் 12ஆம் தேதி கல்யாணம் நடக்க வழி சொல்லுங்கள் என கூறினோம் நான் ,என் தங்கை கணவர் மற்றும் என் சம்பந்தி.அவர் தயங்கியபடி 'சார் தப்பு நடந்து போச்சு ;உங்களுக்கு ஆட்சேபணை இல்லா விட்டால் அருகில் ஒரு மண்டபம் கட்டி கொண்டு இருக்கிறார்கள் ;நவம்பர் மாதம் ரெடி ஆகிவிடும் ;நம்ம கல்யாணம் டிசம்பருக்குள் பக்காவா ரெடி ஆகிவிடும்;பார்க்கலாமா 'என்றார் .அவரே தன் காரில் எங்கள் மூவரையும் அழைத்து சென்று காட்டினார்  பாருங்கள் 'ஆனந்த மஹால்' மண்டபத்தை!அசந்து விட்டோம் நாங்கள்!
              உள்ளே நுழைந்தவுடன் அவர் 'சார்,உங்க வீட்டு  கல்யாணம் இங்க தான்;  அட்வான்ஸ் எடுங்க 'என்று கூற உடனே ஒரு 500 ரூபா தாளை எடுத்துக்கொடுத்தேன் நான்.A /C ரூம் ,A /C முஹுர்த்த ஹால் ,A /C டைனிங்  ஹால் என்று எங்கள் அனைவருக்கும் பிடித்து விட்டது..எங்களை இங்கு அழைத்து வந்த 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' உரிமையாளருக்கும் எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.அந்த உரிமையாளர் அறுசுவை அரசு திரு .கணேசன் அவர்கள்! அன்று மதிய உணவு எங்களுக்கு அவர் வாங்கிதர ,அதிலிருந்து ஸ்வீட்டை என் சம்பந்தி எனக்கும் என் தங்கை கணவருக்கும் ஊட்டிவிட்டு கட்டி பிடித்தபொழுது எங்கள் மூவரின் கண்களிலும் ஆனந்தக்  கண்ணீர்!
              அப்புறமென்ன!கிடுகிடு என மண்டப அட்வான்ஸ் கொடுக்கும்போது பார்த்தால் ஆனந்த மஹால் ஓனர் என் தங்கை கணவருக்கு மிகவும் தெரிந்த நண்பர்.
                1991 இல் என் மகன் உபனயனத்திற்கு 'ஏலக்காய்' மாலை கொடுத்து ஆசிர்வாதம் செய்தவர் மகா பெரியவா.இப்போது அவனின் திருமணத்திற்கு
'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர மஹால்' காலியாக இருப்பதாக வரச் சொல்லி (முதல் நாள் இரவே காலி இல்லை என்று தெரிந்திருந்தால் அங்கு செல்ல வாய்பிரிந்திருக்காது) ஆனந்த மகாலை காட்டிக் கொடுத்து திருமணத்தை நடத்திக் கொடுத்திருக்கிறார் வாழும் தெய்வம் மகா பெரியவா!
               அறுசுவை அரசு திரு .கணேசன்அவர்களின் சமையலுடன்
திரு.நித்யானந்தம் அவர்களின் ஆனந்த மகாலில் மகா பெரியவா  ஆசிர்வாதத்துடன் 12-12-2014 அன்று சிறப்பாக நடை பெற்றது என் மகன் திருமணம்!