திருவடிசூலம் கோயில்கள் --- ( Temples in Tiruvadisoolam )
சென்னைக்கு அருகில் செங்கல்பட்டிலிருந்து 8 KM தொலைவில் உள்ளது திருவடிசூலம் என்ற கிராமம்..இக்கிராமத்தில் புராதனமான ஞானபுரீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.மேலும் இக்கோயிலில் இருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் அருகருகே தற்போது புதிதாக பைரவவர் ,தக்ஷினாமுர்த்தி தியான மண்டபத்துடன் அமைந்த கோயில், 51அடி உயர கருமாரியம்மன் கோயில் மற்றும் பிரம்மாண்ட திருவேங்கடமுடையான் கோயில்கள் அமைத்துள்ளன .
நாங்கள் (9-6-2016 அன்று) கார் மூலம் மாலை 3.30PM தாம்பரத்தில் இருந்து கிளம்பி GST ரோட்டில் மறைமலை நகருக்கு அடுத்து வரும் மகேந்திரா சிட்டி ரோடில் ( It is on the left side of GST road ) பயணம் செய்து மகேந்திரா சிட்டி ரோடில் பின் கேட் அருகில் PARKAR கம்பெனி தாண்டி இடது பக்க சாலையில் சென்றோம் .இந்த சாலை முடியும் இடத்தில பைரவர் கோயில் செல்லும் வழி போர்டு வைக்கப்பட்டு உள்ளது..அதனை பின்பற்றி சென்று கோயிலை அடைந்தோம்.(May be about 5-6 KM from GST road )
அருமையான சுற்றுச் சூழல் .ஆகாயம் போல் அமைந்த விட்டதுடன் கூடிய கோயிலின் உள்ளே 12 ராசிகளை குறிக்கும் 12 படிகள் ஏறி மேடையில் ஒருபுறம் சிவன் மறுபுறம் பைரவர் பகவானை வழிபட்டோம்
பின்பு தியானமண்டபம் வந்து அமர்ந்து அருமையான .தக்ஷினாமுர்த்தி முன்பு சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யலாம்.முடிந்தால் நீலநிற ஆடை அணிந்து ,அன்ன தானத்துக்கு அரிசி (5kg or 10kg or முடிந்த அளவு ) எடுத்து செல்லலாம். இயற்கை எழில் சூழ்ந்த இவ்விடம் மிகவும் அமைதியாக உள்ளது.( M :9940392913)
இக் கோயிலிலிருந்து வெளியே வந்து இடப்புறமாக உள்ள சாலையில் 1-2 km சென்று (இங்கு நோட்டீஸ் போர்டு உள்ளது) 51 அடி உயர கருமாரியம்மன் மற்றும் திருவேங்கடமுடையான் கோயில் அடைந்தோம் .கூட்டமில்லாத ,ஜருகண்டி இல்லாத, அருமையான தரிசனம் .மிக உயரமான பெருமாள்.குருக்கள் நன்கு கோயிலை பற்றி கூறுகிறார் .மனதுக்கு ரம்யமான ஒரு இடம்.(பட்டாச்சாரியார் Sri .R .அனந்தக்ருஷ்னன் 9159252448)
இக் கோயிலிலிருந்து வெளியே வந்து வலது புற சாலையில் திரும்பி சிறுது தூரம் சென்று மீண்டும் வலது புற சாலையில் திருவடிசூலம் சிவன் கோயிலை அடைந்தோம்.மிகவும் புராதனமான கோயில்.குரங்கு கூட்டம் எங்களை வரவேற்றது.இருக்கும் ஒரே பொட்டி கடையில் பூ வாங்கி கொண்டு குரங்குகளிடம் சிக்காமல் கோயில் உள்ளே சென்று' பிறவி இடர் நீக்கும்'இடைசுரனாதர் என்கிற ஞானபுரீச்வரை தரிசித்து ,கோவர்தனாம்பிகை அம்பாளையும் தரிசித்து மன நிறைவுடன் வெளியே வந்தோம்.
(குருக்கள் .M: 9444948937)
இங்கிருந்து செங்கல்பட்டு -திருபோரூர் மெயின் ரோடு அடைந்து (1 km from sivan temple ) செங்கல்பட்டு வந்து தாம்பரம் வந்து சேர்ந்தோம் சுமார் 8-30 மணி அளவில்.
கூடியவரையில் இரவு 7 மணிக்குள் தரிசனம் முடித்து திரும்புவது நல்லது.கார் பயணமாக இருந்தால் நேரம் மிச்சமாகும்.மிக குறைந்த அளவு பஸ்களே இருக்கும் போல் தோன்றுகிறது.
L .சுந்தரராமன்
சிட்லபாக்கம்
9445066061
.
No comments:
Post a Comment